"கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்" - அமைச்சர் செந்தில் பாலாஜி
கோயம்புத்தூரில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் சுமார் 32 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைத் திட்ட பணிகளை தொடங்கி வைத்த பின் பேசிய அமைச்சர், இதுவரை 121 கிலோ மீட்டர் நீள சாலை அமைக்க 223 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கோவை மாவட்ட வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் 9 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments